Friday, July 9, 2010

உலககோப்பை கால்பந்து 2010

உலககோப்பை கால்பந்து போட்டிகள் ஒரு வழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த இறுதி போட்டியில் நெதர்லாந்து (ஹாலந்து) அணியும் ஸ்பெயின் அணியும் பலபரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கு முன் 3 வது இடத்திற்கான போட்டியும் நடைபெற உள்ளது. இதில் அரையிறுதி போட்டிகளில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த உருகுவே அணியும் ஸ்பெயின் அணியிடம் தோல்வி அடைந்த ஜெர்மனி அணியும் மோதுகின்றன.

இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் ஒரு சிறப்பு அம்சமாக ஆக்டோபஸ் மீனின் கணிப்பு இருந்தது. இங்கிலாந்தில் பிறந்த இந்த மீன் இப்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொட்டியில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஜெர்மனி அணி விளையாடும் போட்டிகள் குறித்து முன் கூட்டியே முடிவை அறிந்து கொள்ள இந்த மீன் இருக்கும் தொட்டியில் இரு பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவு வைக்கப்படும். ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் ஜெர்மனி நாட்டு கொடியும் மற்றொரு கண்டெய்னரில் ஜெர்மனியுடன் விளையாடும் மற்ற நாட்டு கொடியும் இருக்கும். ஆக்டோபஸ் எந்த கண்டெய்னரில் உள்ள உணவை படர்கிறதோ அந்த அணி வெற்றி பெரும் என்று கணிக்கப்பட்டது.

உலககோப்பை 2010 ஐ பொறுத்தவரை இந்த மீனின் கணிப்பு இதுவரை சரியாகவே இருந்துள்ளது. ஆயினும் கடந்த 2008 ம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகளில் இந்த மீனின் கணிப்பு இரு முறை தவறான முடிவை கொடுத்துள்ளது.

இனி நடைபெற இருக்கும் 3 வது இடத்திற்கான போட்டி மற்றும் இறுதி போட்டியில் யார் வெல்வார்கள் என கணிக்க ஆக்டோபஸ் பயன்படுத்தபட்ட போது 3 வது இடத்தை ஜெர்மனியும் இறுதி போட்டியில் ஸ்பெயினும் வெல்லும் என ஆக்டோபஸ் கணித்துள்ளது. ஜெர்மனி அணி தவிர மற்ற நாடுகள் விளையாடும் போட்டியின் முடிவை அறிய ஆக்டோபஸ் பயன்படுத்தபடுவது இப்போது தான்.

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/09-football-octopus-predicts-spain-win-wc.html

இதற்கிடையே உலககோப்பையை நெதர்லாந்து அணி தான் கைப்பற்றும் என்று சிங்கப்பூரில் உள்ள ஒரு கிளி கணித்துள்ளது. திரு.முனியப்பன் என்பவரிடம் வளர்ந்து வரும் அந்த கிளியின் கணிப்பு சரியாக இருக்குமா அல்லது ஆக்டோபஸின் கணிப்பு சரியாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

http://thatstamil.oneindia.in/sports/fifa-worldcup/2010/09-football-singapore-parrot.html

இந்த உலககோப்பையின் சிறப்பு அம்சமாக ஸ்பெயின் அணி முதல் முறையாக இறுதி போட்டியில் விளையாட உள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் இது வரை உலககோப்பையை ஐரோப்பிய மண்ணில் தான் வென்றுள்ளார்கள். வேறு எந்த நாட்டில் விளையாடிய போது வென்றதில்லை. முதல் முறையாக ஐரோப்பிய நாடு ஒன்று அந்நிய மண்ணில் கோப்பையை கைப்பற்ற போகிறது. அது நெதர்லாந்தா ஸ்பெயினா என்பது வரும் ஞாயிறு பின்னிரவு (திங்கள் விடியற்காலை) அன்று நடைபெறும் இறுதி போட்டியின் முடிவில் தெரிந்து விடும்.

3 comments:

  1. மன்னிக்கவும். உங்கள் பதிவை உபுன்டு இயங்குதளத்தில் படிக்க முடியவில்லை. தமிழ் எழுத்துகள் சரியாக தெரியவில்லை.

    ReplyDelete
  2. Please remove word verification for comments. See this blog post for instructions.

    பிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை நீக்க

    http://tvs50.blogspot.com/2009/11/remove-word-verification-blogger.html

    ReplyDelete
  3. உங்கள் வருகைக்கு நன்றி.
    பிளாக்கரில் வோர்ட் வெரிபிகேஷனை இப்போது நீக்கி விட்டேன்.
    உபுண்டு இயங்குதளத்தில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரிய வைக்க முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete